Nov 7, 2008

காதல் !

அவளை பார்த்து சிரித்தேன் .,
எனக்கு கரம் கொடுத்து சீராகினாள்.,
'காதலா?' என்றால், இல்லை.,
அன்பு' என்றேன்.
அவளுக்கு துன்பம் என்றால்,
என் மனம் துடித்தது.,
'காதலா?' என்றால், இல்லை.,
அன்பு' என்றேன்.
என்னுடனேயே இருந்தாள்
என் உயிர் போல் ஆனால்.,
'காதலா?' என்றால், இல்லை.,
அன்பு' என்றேன்.
அவள் மணநாள் மேடையில்,
என்னை பார்த்தல் என்கண்ணில் நீர்.,
அன்பா ? என்றால் .,
இல்லை என்று சொல்ல முடியாமல் .,
ஆம் என்று தலை அசைத்தேன் கண்நீருடன் !

கவிதை
உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
எல்லோரும் சொல்கிறார்கள்...
நான்
காதலித்ததே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...

1 comment:

Anonymous said...

very nice is it ur own