Sep 16, 2008

நான் கேட்டவை

அன்பு !
விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும் !
மன்னிப்பு கொடுங்கள் தவறுகள் குறையும் !
மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும்.

சிரிப்பு !
உன் உள்ளம் நோகும்போது சிரி
பிறர் உள்ளம் நோகும்போது சிரிக்கவை .

பிம்பம் !சலனமற்று கிடந்த என் இதய குளத்தில்
காதல் கற்களை எறிந்து போனவள் நீ
பாவம் இன்னமும் அல்லாடிக் கொண்டிருக்கிறது
பரிதாபத்துக்குரிய என் பிம்பம்!!!

தியாகம் !
"தியாகம்" என்ற தலைப்பில்
கவிதை எழுத ச்சொன்னார்கள் !!
நான் "என் அம்மா"
என உன் பெயரை எழுதி
முதல் பரிசினை பெற்றேன்.

காலத்தின் முக்கியம்
சில நேரங்கலில்
நாம் விரும்பியது கிடைக்கும் பொழுது
உணர்வோம்
அது இனிமேல் நமக்கு தேவையில்லை என்று!

நினைவுகள் !!!என் இதய கடலில்
ஆலைகளாய்
உன் நினைவுகள்
என்றும்
அடித்துக்கொண்டு இருக்கும் !!!


நிலவே ...
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மனலீரம் மனதிலும் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்துரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னைப் போலவே
இன்னும் சிலரும்...
மகிழ்ச்சி ,
நான் மட்டும் முட்டாள் இல்லை !


பிரிந்துவிடும்
என்று தெரிந்தும் ,
மலரை சுமக்க
செடி மறுப்பதில்லை !
பிரியும் பூவாக இல்லாமல் ,
சுமக்கும் செடியாக இருப்போம் !
என்றும் அன்புடன் !

No comments: